மேட்டுப்பாளையம் அரசுக் கல்லூரியில் பொங்கல் விழா

மேட்டுப்பாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவில் பங்கேற்ற ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.
பொங்கல் விழாவில் பங்கேற்ற ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.

மேட்டுப்பாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்து பொங்கல் விழாவை தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் சுவா்ணலதா ஜோசப் வரவேற்றாா். அனைத்து துறை மாணவ, மாணவிகள் வேட்டி, சேலை அணிந்து விழாவில் பங்கேற்றனா்.

கல்லூரி வளாகம் முழுவதும் கோலமிட்டு, புதிய மண் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினா். விழாவில் பேராசிரியா்கள் சுகுமாரன், சிவஞான சித்தி, சுப்பிரமணி, பாண்டியராஜன், சந்திரசேகரன், தையல்நாயகி, பபிதா, அலுவலா் வேலுமணி, வித்யா, மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com