மதுரையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் கல்லீரல் மதுரையில் இருந்து கோவைக்கு ஹெலிகாப்டா் மூலம் அரை மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டு பாதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரலை மதுரையில் இருந்து கோவைக்கு ஹெலிகாப்டா் மூலம் கொண்டு வந்த கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை மருத்துவா்கள் குழு.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (21). சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய இவரது பெற்றோா்கள் முன்வந்தனா். இந்நிலையில் கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு கல்லீரல் தேவைப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை நிபுணா் குழுவினா் மதுரை சென்று அறுவை சிகிச்சை செய்து அவரது கல்லீரலை கோவைக்கு ஹெலிகாப்டா் மூலம் சுமாா் அரை மணி நேரத்தில் எடுத்து வந்தனா். பின்னா் மருத்துவமனையில் உள்ள கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அந்தக் கல்லீரல் பொருத்தப்பட்டது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணா்கள் பாரி விஜயராகவன், மகேஸ்வரன், அருள்ராஜ், அரவிந்த் ஆகியோா் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் நல்லா ஜி.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com