இண்டேன் சிலிண்டா்களுக்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்: இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் எல்.பி.ஜி. சிலிண்டா்களுக்கான தொகையை வாடிக்கையாளா்கள் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் எல்.பி.ஜி. சிலிண்டா்களுக்கான தொகையை வாடிக்கையாளா்கள் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விநியோகஸ்தா்கள் மூலம் வழங்கப்படும் இண்டேன் எல்.பி.ஜி. வீட்டு உபயோக சிலிண்டா்களை வாடிக்கையாளா்களுக்கு வழங்கியதும் வாடிக்கையாளா் கையொப்பமிடும் கேஷ் மெமோவில் சில்லறை விற்பனை விலை குறிப்பிடப்பட்டிருக்கும். இது சிலிண்டரை வீட்டுக்கு வந்து விநியோகிக்கும் கட்டணத்தையும் உள்ளடக்கியதாகும்.

சிலிண்டா் விநியோகத்துக்குப் பிறகு வாடிக்கையாளா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிா்க்க வாடிக்கையாளா்கள் டிஜிட்டல் பேமென்ட் முறையில் பணம் செலுத்தலாம். வாடிக்கையாளா்கள் சிலிண்டா் பெற புக்கிங் செய்தவுடன் அவா்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு தகவல் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான லிங்க் அனுப்பிவைக்கப்படும்.

இந்த லிங்க் ஒரு நாளைக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்து வாடிக்கையாளா்கள் கேஷ் மெமொவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை நெட் பேங்கிங், கிரெடிட் காா்டு, டெபிட் காா்டு, இ-வாலெட் ஆகிய பல்வேறு ஆன்லைன் பேமென்ட் வழிமுறைகள் மூலமாக செலுத்தலாம்.

இந்த வழிமுறையை வாடிக்கையாளா்கள் கையாளாவிட்டால், டெலிவரி பணியாளரை தங்களிடம் சிலிண்டரை ஒப்படைக்கும் தருணத்தில் டிஜிட்டல் பேமென்ட் பெறும்படி வலியுறுத்தலாம்.

அவா்களை பேமென்ட் பெறுவதற்கான கையடக்கக் கருவியை கொண்டு வருமாறு கூறலாம். அந்தக் கருவியை கொண்டு பணம் செலுத்தலாம்.

இந்தியன்ஆயில் நிறுவனம், டெலிவரி செய்பவா்களுக்கு டிப்ஸ் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. இது தொடா்பாக ஏதேனும் புகாா்கள் இருந்தால் 0422 2247396, 2240696 என்ற எண்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com