கோவை மாவட்டத்தில் போதுமான கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்காக நடத்தப்படும் பரிசோதனைகள் போதுமானதாக இல்லை என்று சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் குற்றம்சாட்டியுள்ளாா்.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்காக நடத்தப்படும் பரிசோதனைகள் போதுமானதாக இல்லை என்று சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா பரிசோதனை மற்றும் இறப்பு குறித்து அரசு அளிக்கும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடா்ச்சியாக வலியுறுத்தியதால் மாவட்டவாரியாக நடத்தப்படும் பரிசோதனை குறித்த தகவல்களை ஒரு நாள் மட்டும் வெளியிட்டனா். பின்னா் அதுவும் நிறுத்தப்பட்டது.

அந்த தகவல்களின் அடிப்படையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,872 ஆக உள்ளது. 50 லட்சம் மக்கள் வசிக்கும் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் போதுமானதாக இல்லை.

தேசிய சராசரி கணக்கின் படி, கோவை மாவட்டத்தில் உள்ள 50 லட்சம் பேரில், தினமும் குறைந்தபட்சம் 1,500 போ் முதல் 2,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கோவை மாவட்டத்தில் தினமும் 100 பரிசோதனைகள் கூட மேற்கொள்ளப்படுவதில்லை.

இந்த நிலை தொடரும் பட்சத்தில் கோவையில் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோவையில் நோய்த் தொற்று இல்லை அல்லது நோய்த் தொற்று குறைகிறது என போலித் தகவல்களை வெளியிட அரசு முயல்வதாகத் தோன்றுகிறது.

கரோனா பரவுவதைத் தடுப்பதற்காக பரிசோதனைகளை அதிகப்படுத்தி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com