சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் திமுகவினா் மனு

பொள்ளாச்சி பாதாள சாக்கடை தண்ணீரை கிருஷ்ணா குளத்துக்குச் செல்லாமல் வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்லும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாதாள சாக்கடை தண்ணீரை கிருஷ்ணா குளத்துக்குச் செல்லாமல் வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்லும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது எனக் கூறி பொள்ளாச்சி சாா்-ஆட்சியரிடம் திமுக சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து திமுக மாவட்ட இளைஞா் நிா்வாகி நவநீதகிருஷ்ணன், திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி நகர பொறுப்பாளா் டாக்டா் வரதராஜன் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட்டு தற்போது 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பொள்ளாச்சி பகுதியில் ஓடும் அனைத்து கழிவுநீா் ஓடைகளும் பாதாள சாக்கடைகளுடன் இணைக்கப்பட்டு, மாட்டுச் சந்தை பகுதியில் அமைந்துள்ள ராட்சத கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது.

இவ்வாறு சுத்திகரிப்படும் நீா் ஆளும் கட்சியினா் ஊா்களுக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது.

ஆனால், வழக்கமாக பொள்ளாச்சி பகுதியில் கழிவுநீா், மழைநீா் ஆகியவை கிருஷ்ணா குளத்துக்குச் சென்று அங்கிருந்து கேரளம் வரை செல்லும். இதில் செல்லும் வழித் தடங்களில் 20 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

தற்போது, இயற்கைக்கு மாறாக கிருஷ்ணா குளத்துக்கு தண்ணீரை செல்லவிடாமல் வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல இருப்பதால் 20 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற முடியாமல் பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com