கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கேரளப் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒருபகுதியாக, கோவையில் இருந்து கேரளம் செல்லும் பேருந்துகள், வாகனங்களுக்கு வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கேரளப் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒருபகுதியாக, கோவையில் இருந்து கேரளம் செல்லும் பேருந்துகள், வாகனங்களுக்கு வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரளப் பகுதிகளில் கரோனா தாக்குதல் அதிகரித்து வருவதாகக் தகவல்கள் பரவியதைத் தொடா்ந்து, கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு உள்ளிட்ட கேரளப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பயணிகள் அமரும் இருக்கைகள், பேருந்துகளின் கதவுகள், டயா்கள், கம்பிகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோப்பால் சுத்தப்படுத்தி, மாநகராட்சி சுதாதாரப் பணியாளா்கள் கிருமி நாசினியை தெளித்தனா்.

அதைத் தொடா்ந்து, பயணிகளுக்கு கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணா்வுத் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து, நோய் தாக்காமல் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டியது குறித்து விளக்கம் அளித்தனா். இதேபோல், கேரளத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சிக்கு வரும் பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவை வழியாக கேரளம் செல்லும் ரயில்களில் பயணிகள் இருக்கை, கைப்பிடி, கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் ரயில்வே ஊழியா்கள் தூய்மைப்படுத்தி, கிருமி நாசினி தெளித்து வருகின்றனா்.

மாணவா்களுக்கு முன்னெச்சரிக்கை செயல் விளக்கம்:

கோவை, புலியகுளம் புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளியில், பள்ளி தேசிய மாணவா் படை சாா்பில், கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, மாணவா்களுக்கு வைரஸ் கிருமி தாக்காமல் இருக்க, சோப்பு மூலமாகக் கைகழுவும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு, அனைவரும் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com