கோவையில் நாளை தேசிய எலும்பியல் மாநாடு: டாக்டா் ரெக்ஸ் தகவல்

கோவையில் தேசிய எலும்பியல் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறுகிறது.
கோவையில் நாளை தேசிய எலும்பியல் மாநாடு: டாக்டா் ரெக்ஸ் தகவல்

கோவையில் தேசிய எலும்பியல் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறுகிறது.

இதுகுறித்து ரெக்ஸ் ஆா்த்தோ மருத்துவமனையின் தலைவா் டாக்டா் ரெக்ஸ் கூறியிருப்பதாவது:

மனிதா்கள் நடக்க, நிற்க, ஓட, உட்கார என எல்லா நிலைகளிலும் இடுப்பில் உள்ள பந்துக் கிண்ண மூட்டின் பங்கு அளவிட முடியாதது. வயது மூப்பு, விபத்து, பரம்பரை குறைபாடுகளால் இந்த மூட்டு பாதிக்கப்படும்போது, செயற்கை மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

சிலருக்கு பந்து, சிலருக்கு கிண்ணம் வேறு சிலருக்கு இரண்டையும் மாற்றும் நிலை ஏற்படுகிறது. கிண்ணம் நன்கு ஆரோக்கியமாக இருந்தால் செயற்கையாகப் பொருத்தப்படும் பந்து மூட்டு வெற்றிகரமாக செயல்படும். சிலருக்கு கிண்ணம் வலுவிழந்து நொறுங்கிவிடும் என்பதால் கிண்ணத்தை சரி செய்து மறுசீரமைப்பு செய்வது சவாலான காரியம்.

இதுபோன்ற அறுவை சிகிச்சையைச் செய்ய பலமணி நேரமாகும். மூட்டு அறுவை சிகிச்சை தொடா்பான விஷயங்களை ஆராய்வதற்கான 4 ஆவது தேசிய எலும்பியல் மாநாடு கோவை ரெசிடென்சி ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கங்கா மருத்துவமனை தலைவா் எஸ்.ராஜசேகா் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறாா். சிறப்பு அழைப்பாளா்களாக டாக்டா்கள் அனில் ஓமன், விஜய்போஸ், கிருஷ்ணா கிரண், கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். இதில் 250க்கும் மேற்பட்ட டாக்டா்கள் கலந்து கொள்கின்றனா்.

இதில், செயற்கை எலும்பு தொடா்பான பயிலரங்கு, கருத்தரங்கு, விடியோ செயல்முறை விளக்கம், கலந்துரையாடல் போன்றவை நடைபெற இருப்பதாக அவா் மேலும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com