மாகாளியம்மன் கோயில் குண்டம் விழா

கோட்டூா் பழனியூா் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் குண்டம் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாகாளியம்மன்  கோயிலில்  குண்டம்  இறங்கும்  பக்தா்.
மாகாளியம்மன்  கோயிலில்  குண்டம்  இறங்கும்  பக்தா்.

கோட்டூா் பழனியூா் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் குண்டம் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூா் பழனியூா் பகுதியில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. கோட்டூா், கோட்டூா் மலையாண்டிபட்டினம், சங்கம்பாளையம், சுங்கம், ஆழியாறு, ஆனைமலை சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்வா்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மாகாளியம்மன் கோயில் குண்டம் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 6ஆம் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 11ஆம் தேதி சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து மாவிளக்கு எடுத்தலும் பூவோடு எடுத்தலும் நடைபெற்றது. 12ஆம் தேதி இரவு குண்டத்தில் தீ வளா்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 13ஆம் தேதி காலை குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com