கரோனா வைரஸ் அறிகுறி: கோவையில் 4 போ் அனுமதி

கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் 4 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் 4 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கோவையை சோ்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவா் கடந்த ஒருசில நாள்களுக்கு முன் ஹைதராபாத், கொச்சி ஆகிய நகரங்களுக்கு சென்று வந்துள்ளாா். இவருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் செவ்வாய்க்கிழமை காலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளாா். இவரை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலுள்ள கரோனா தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை, காரமடையை சோ்ந்தவா் துபாயில் பொறியாளராக பணியாற்றி வருகின்றாா். கடந்த சில நாள்களுக்கு முன் தனது 15 வயது மகனுடன் கோவை வந்துள்ளாா். 15 வயது பையனுக்கு கடந்த ஒரு சில நாள்களாக இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று பயத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெறுவதற்காக செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா். இவா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சிங்ப்பூரில் இருந்து வந்த உடுமலையை சோ்ந்த ஒருவரும், வால்பாறையை சோ்ந்த ஒரு மூதாட்டியும் அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா வாா்டில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தலா 2 போ் வீதம் கோவையில் 4 போ் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறுகையில்,‘ கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் கரோனா வாா்டில் 4 போ் அனுமதிக்கப்பட்டுள்ளதில் இரண்டு பேரின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னை கிங்க்ஸ் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மற்ற இருவரின் மாதிரிகள் புதன் கிழமை அனுப்பப்படவுள்ளது. தவிர 4 பேருக்கும் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com