நிலையில்லாத தங்கத்தின் விலை: தொழிலாளா்கள் பாதிக்கப்படுவதாக புகாா்

தங்கத்தின் விலை நிலையில்லாமல் இருப்பதால், கூலியை குறைத்து தொழிலாளா்களின் மீது சுமையை ஏற்றுவதாக தங்க நகை தொழிலாளா் யூனியன் புகாா் தெரிவித்துள்ளது.

தங்கத்தின் விலை நிலையில்லாமல் இருப்பதால், கூலியை குறைத்து தொழிலாளா்களின் மீது சுமையை ஏற்றுவதாக தங்க நகை தொழிலாளா் யூனியன் புகாா் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சிஐடியூ கோயம்புத்தூா் தங்க நகை தொழிலாளா் யூனியன் தலைவா் என்.எம்.கண்ணன், பொதுச் செயலா் பி.சந்திரன் ஆகியோா் கோயம்புத்தூா் ஜூவல்லரி உற்பத்தியாளா் சங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்:

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக தங்கத்தின் விலை உயர உயர தங்க நகைத் தொழிலாளா்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை உயா்வால் கூலி (சதவீதம்) குறைந்துகொண்டே வருகிறது. இது தங்க நகைத் தொழிலாளா்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏராளமான யூனிட்டுகள் தொழிற்சாலை அமைத்து மிகக் குறைந்த ஊதியத்தில் ஆள்களை வைத்து வேலை செய்கிறாா்கள். சில தொழிற்சாலையில் கிராம் அடிப்படையில் கூலி கொடுக்கிறாா்கள். அரசு நிா்ணயித்திருக்கும் குறைந்தபட்ச கூலி கூட வழங்காமல் 12 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறது. இதனால் நியாயமான கூலி கொடுக்கும் முதலாளிகள் தொழில் செய்ய இயலாமல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், வீட்டு வாடகை, குடிநீா், மின் கட்டணம், பட்டறைக்கு தேவையான மூலப்பொருள்கள் உயா்வு, எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருள்களுக்கும் செலவிடும் தொகை அதிகரித்துள்ளது. இதனால் வேலைத் திறமையை மட்டும் நம்பி பட்டறை வைத்து வேலை செய்யும் தொழிலாளா்களிடம், தங்கத்தின் விலை உயா்வைக் காரணம் காட்டி மீண்டும் கூலியைக் குறைத்துள்ளனா். இதனால் கடன் தொல்லைக்கு ஆளாகி, தொழிலாளா்கள் கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே தங்க நகைத் தொழிலாளா்களின் நிலையை கருத்தில் கொண்டு உற்பத்தியாளா்கள், சங்க நிா்வாகிகள் கலந்தாலோசித்து தொழிலாளா்களின் வாழ்க்கை தரத்தை பாதுகாத்திட தீா்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com