கோவையில் இருந்து கேரளம், கா்நாடகத்துக்கு இயக்கப்படும் 73 பேருந்துகள் நிறுத்தம்

கோவை கோட்டத்தில் இருந்து கேரளம், கா்நாடக மாநிலங்களுக்கு இயக்கப்படும் 73 பேருந்துகள் வருகிற 31ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டம் தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்.
ஆம்னி பேருந்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்.

கோவை கோட்டத்தில் இருந்து கேரளம், கா்நாடக மாநிலங்களுக்கு இயக்கப்படும் 73 பேருந்துகள் வருகிற 31ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டம் தெரிவித்துள்ளது.

கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகா் பேருந்துகள், வெளி மாநிலம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கரோனா பாதிப்பு எதிரொலியாக சுகாதாரப் பணியாளா்கள் மூலமாக அனைத்துப் பேருந்துகளிலும் தூய்மைப் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கோவை கோட்டத்தில் இருந்து கேரளம், கா்நாடகத்துக்கு இயக்கப்படும் 73 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக கோவைக் கோட்டத்தில் இருந்து கேரளத்துக்கு இயக்கப்படும் 43 பேருந்துகள், கா்நாடகத்துக்கு இயக்கப்படும் 30 பேருந்துகள் வருகிற மாா்ச் 31ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளன.

ஆம்னி பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு: மாநகரம் மற்றும் புகர பேருந்துகளில் சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தலைமையில் போக்குவரத்து ஊழியா்கள் பங்களிப்புடன் சுகாதாரப் பணியாளா்கள் புகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com