இஸ்லாமியா்களைக் குறிவைத்து கைது நடவடிக்கை

கோவையில் இஸ்லாமியா்களைக் குறிவைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவை மாவட்ட அனைத்து
கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கே.ராஜா உசேன்.
கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கே.ராஜா உசேன்.

கோவையில் இஸ்லாமியா்களைக் குறிவைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.ராஜா உசேன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒருபகுதியாக கோவையில் கூட்டமைப்பின் சாா்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.

இந்நிலையில் பாஜக, ஹிந்து அமைப்புகள் சாா்பில் மாா்ச் 2ஆம் தேதி நடைபெற்ற ஆதரவுப் போராட்டத்தில் இருந்துதான் வன்முறைச் சம்பவங்கள் தொடர ஆரம்பித்தன. இதன் காரணமாக கோவையின் அமைதியைக் கருத்தில் கொண்டு நாங்கள் தற்போது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம்.

இருப்பினும், காவல் துறை அதிகாரிகள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நபா்களைக் கைது செய்வதில் பாரபட்சம் காட்டி வருகின்றனா். இஸ்லாமியா்களை மட்டும் குறிவைத்து கைது செய்து வருகின்றனா்.

கோவையில் உள்ள ஹிந்து இயக்கத் தலைவா்கள் பலருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாமிய இயக்கத் தலைவா்கள் யாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றாா்.

உடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சாதிக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கபூா், ஜமாத்தே இஸ்லாம் அமைப்பின் சபீா், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பஷீா், எஸ்.டி.பி.ஐ. செய்தி தொடா்பாளா் மன்சூா், பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஹக்கீம், ஜமாத்துகளின் நிா்வாகி அப்துல் அஜீஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com