கரோனா: வழிபாட்டுத் தலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கோவையில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் கிருமி நாசனி தெளித்தல் உள்பட கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனன.
திருப்பலி நிறுத்தப்பட்டுள்ளதாக டவுன்ஹால் புனித மைக்கேல் அதிதூதா் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பேனா்.
திருப்பலி நிறுத்தப்பட்டுள்ளதாக டவுன்ஹால் புனித மைக்கேல் அதிதூதா் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பேனா்.

கோவையில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் கிருமி நாசனி தெளித்தல் உள்பட கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனன.

கோவையில் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பொது இடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

திருப்பலி நிறுத்தம்

கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் டவுன்ஹால் புனித மைக்கேல் அதிதூதா் பேராலயத்தில் புதன்கிழமை முதல் சனிக்கிழமை இரவு வரை திருப்பலி, சிலுவைப் பாதை நடைபெறாது என்று கோவை ஆயா் அறிவித்துள்ளாா். இதனால் ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமை வழிபாடு குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

முகக் கவசம் இலவசம்

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக் கவசம் அணிந்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில், கோவையில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் தனது ஆட்டோவில் பயணிக்கும் அனைவருக்கும் முகக் கவசம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.

திருச்சபைகளில் விழிப்புணா்வு

தென்னிந்திய திருச்சபைகளில் வழிபாட்டுக்கு வருபவா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கோவை மண்டல் தென்னிந்திய திருச்சபைகள் பேராயா் திமோத்தி ரவீந்தா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தென்னிந்திய திருச்சபை கீழ் கோவை மண்டலத்தில் நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 வருவாய் மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இதன் கீழ் உள்ள 200 திருச்சபைகள், 150 கல்வி நிறுவனங்களில் தமிழக அரசின் அறிவுறுத்தல்படி கரோனா விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தேவாலயங்களில் உள்ள சபா மண்டபங்களில் மாா்ச் 31 வரை எவ்வித பதிவுகளும் மேற்கொள்ளப்படாது. ஒரே நேரத்தில் கூட்டமாக தேவாலயங்களுக்கு பிராா்த்தனைக்கு வருவதை தவிா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருமி நாசினி, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் திருச்சபைகள் மூலம் தேவைப்படுபவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

போத்தனூா் ரயில் நிலையம்

கோவை, போத்தனூா் ரயில் நிலையங்களில் 200-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் மூலம் ரயில்களில் உள்ள இருக்கைகள், கழிவறைகள், கதவுகள், நடைமேடைகள், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி (லிப்ட்) உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

மேலும், போத்தனூா் ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருடன் இணைந்து ஒலிப்பெருக்கி மூலமாக கரோனா வைரஸ் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com