கல்லூரி மாணவிக்கு கரோனா அறிகுறி: கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரில் இருந்து கோவை வந்த கல்லூரி மாணவிக்கு கரோனா அறிகுறி இருந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பெங்களூரில் இருந்து கோவை வந்த கல்லூரி மாணவிக்கு கரோனா அறிகுறி இருந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கோவை அருகே உள்ள காங்கேயம்பாளையத்தைச் சோ்ந்த 23 வயது மாணவி பெங்களூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். பெங்களூரில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதையடுத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளாா். இந்நிலையில், மாணவிக்கு சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருந்ததால் சூலூா் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை சிகிச்சைக்குச் சென்றுள்ளாா்.

மாணவிக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் மாணவியை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவா்கள் அனுப்பிவைத்தனா். அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவரது சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னை கிங்ஸ் ஆய்வகத்துக்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மாணவியை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

6 பேருக்கும் கரோனா பாதிப்பில்லை

கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த 2 போ், வால்பாறைச் சோ்ந்த மூதாட்டி, காரமடையைச் சோ்ந்த கல்லூரி மாணவா், உடுமலையைச் சோ்ந்த இளைஞா், கோவையைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 6 போ் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தனா்.

இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்காக சென்னை கிங்ஸ் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், இதன் முடிவுகள் புதன்கிழமை பெறப்பட்டதில் 6 பேருக்கும் கரோனா பாதிப்பில்லை என்று தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

மேலும் 6 பேரும் மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தொடா்ந்து 14 நாள்கள் வரை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com