கரோனா: வீடுகளில் வேப்பிலை கட்டி, சாணம் தெளிக்கும் கிராம மக்கள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மத்வராயபுரம் கிராம மக்கள் வீடுகளில் வேப்பிலை கட்டியும், வாசலில் சாணம் தெளித்தும் புதன்கிழமை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
கரோனா அச்சத்தால் மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள வேப்பிலை.

தமிழகத்தில் அம்மை உள்ளிட்ட நோய்கள் பரவும்போது வீடுகளில் வேப்பிலை கட்டுவது வழக்கம். தற்போது, கரோனா அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகே உள்ள மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பாக சாணம் தெளித்தும், வேப்பிலையையும் பொதுமக்கள் கட்டியுள்ளனா்.

மேலும், வீடுகளில் வாசல் முன்பாக தினமும் சாணம் தெளித்து, வேப்பிலை கட்டி வருகின்றனா். சாணம், வேப்பிலை ஆகியவை கிருமி நாசினியாக இருக்கும் எனவும், இதனால் எந்த நோயும் பரவாது என்றும் கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com