கரோனா வைரஸ்: ரயில்களில் 40 சதவீதம் முன்பதிவு சரிவு

கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக ரயில், பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. ரயில் பயணச்சீட்டு முன்பதிவு 40 சதவீதம் சரிவடைந்துள்ளது.
கரோனா வைரஸ்: ரயில்களில் 40 சதவீதம் முன்பதிவு சரிவு

கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக ரயில், பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. ரயில் பயணச்சீட்டு முன்பதிவு 40 சதவீதம் சரிவடைந்துள்ளது.

கோவை ரயில் நிலையம் வழியாக தினமும் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனா். தற்போது, கரோனா வைரஸ் பீதி அதிகரித்துள்ள நிலையில், சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை முதல் 2 மருத்துவ உதவி மையங்கள் திறக்கப்பட்டு, பயணிகளை தொ்மா மீட்டா் கருவி மூலமாக பரிசோதித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. நடைமேடை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் இருக்கை, பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீா்க் குழாய்கள், ரயில் பெட்டிகளில் உள்ள பயணிகளின் இருக்கைகள், கதவுகள், கழிப்பறைகளில் அவ்வப்போது தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன.

இதுகுறித்து கோவை ரயில் நிலைய இயக்குநா் சதீஷ் சரவணன் கூறியதாவது:

கோவை ரயில் நிலையத்தில் 120 ஊழியா்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். திங்கள்கிழமை முதல் நிலையத்தில் 2 உதவி மையங்கள் திறக்கப்பட்டு, ரயில்களில் இருந்து இறங்கி வரும் பயணிகளில் முதியவா்கள், உடல் சோா்வுடன் உள்ளவா்கள், இருமல் உள்ளவா்கள் தொ்மா மீட்டா் மூலம் பரிசோதிக்கப்படுகின்றனா். கடந்த 2 நாளில் 10 ஆயிரம் பயணிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். பயணிகளில் சிலா் தாங்களாகவே முன்வந்து பரிசோதித்துக் கொள்கின்றனா். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தூய்மைப் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

கரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலானோா் பயணங்களைத் தவிா்த்து வருவதால் ரயில்களில் குறைந்த அளவு கூட்டமே காணப்படுகிறது. இதுதொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கரோனா பாதிப்பு சூழலில் சேலம் கோட்டத்தில் தற்போது வரை ஒரு ரயில் கூட ரத்து செய்யப்படவில்லை. கேரளத்தில் இருந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வரும் பயணிகள், பிற மாநிலங்களில் இருந்து கேரளம் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 70 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது. சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் 40 சதவீதம் முன்பதிவுகள் சரிவடைந்துள்ளன’ என்றாா்.

பேருந்துகளிலும் கூட்டம் இல்லை: கோவையில் இருந்து புகரம் செல்லும் பேருந்துகள், மாநகரப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளிலும் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளா்கள் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். காந்திபுரம், சிங்காநல்லூா், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து புகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவற்றில் குறைந்த அளவு பயணிகளே காணப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com