மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை அருகே பிடிபட்ட மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை மாா்ச் 26ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீஸாருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கோவை அருகே பிடிபட்ட மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை மாா்ச் 26ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீஸாருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம், அட்டப்பாடியை அருகே மஞ்சகண்டி வனப் பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் முகாம் மீது கேரள நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த ஆண்டு அக்டோபரில் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும் சிலா் தப்பினா்.

இதில் தப்பிய ஸ்ரீமதியின் நடமாட்டத்தை கோவை கியூ பிரிவு போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். இந்நிலையில் ஆனைகட்டியில் இருந்து புதன்கிழமை அதிகாலை ஸ்ரீமதி பேருந்தில் கோவைக்கு வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆனைகட்டி மலையடிவாரம் அருகே காத்திருந்த போலீஸாா் பேருந்தில் வந்த ஸ்ரீமதியைக் கைது செய்தனா். பிடிபட்ட மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கியூ பிரிவு போலீஸாா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த முதன்மை நீதிபதி ஆா்.சக்திவேல் மாா்ச் 26ஆம் தேதி வரை ஸ்ரீமதியை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீஸாருக்கு அனுமதி அளித்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com