அதிக லாபம் தருவதாக கூறி ரூ.25 கோடி மோசடி: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கைது

அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.25 கோடி வரை மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.25 கோடி வரை மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, போத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் கிளாரா வின்னரசி (34). ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவருக்கு நண்பா் ஒருவா் மூலம் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் மணி (44) என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.

இந்நிலையில்தான் ஒரு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதற்கட்டமாக ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம்தோறும் ரூ.22 ஆயிரத்து 500 தருவதாகவும், முழுத் தொகையை மூன்று மாதங்களுக்குள் தருவேன் என்று கிளாரா வின்னரசியிடம் மணி கூறியுள்ளாா்.

இதனை நம்பி கிளாரா மூன்று தவணைகளாக ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தை மணியிடம் கொடுத்துள்ளாா். ஆனால், உறுதி அளித்தபடி மணி பணம் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவா் மணியிடம் கேட்டபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா்.

இதுதொடா்பாக கோவை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் கிளாரா புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, திருப்பூா், கோவை, நீலகிரியைச் சோ்ந்த பலரிடம் இதேபோல ரூ.25 கோடி வரை மணி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் மணியைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள அவரது நண்பா் மஞ்சுநாதனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com