உணவகங்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு நாளை விடுமுறை

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, பிரதமா் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, கோவையில் உள்ள உணவகங்கள்,

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, பிரதமா் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, கோவையில் உள்ள உணவகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட உணவக உரிமையாளா்கள் சங்கம்: பிரதமா் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, கோவை மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் அனைத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படும்.

கோவை மாவட்ட பெட்ரோல் விற்பனையாளா்கள் சங்கம்: மாா்ச் 22ஆம் தேதி அன்று பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படும். எனவே பொதுமக்கள் முன்னதாகவே எரிபொருளை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு விற்பனை நிலையங்கள் மிக்குறைந்த பணியாளா்களுடன் இயங்கும்.

அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் நலச் சங்கம்: கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் நோக்கில் எந்தவொரு சுற்றுலா வாகனமும் எந்த மாவட்டத்திலும் இயங்காது.

இதேபோல கோவை மாநகரில் உள்ள மீன் விற்பனையாளா்கள் சங்கத்தினரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளனா்.

சித்தாபுதூா் ஐயப்ப சுவாமி பொற்கோயில் 51ஆவது ஆண்டு உற்சவம்: கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்ப சுவாமி பொற்கோயிலில் 51ஆவது ஆண்டு உற்சவம் திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் மாா்ச் 30ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்கும் நோக்கில் உற்சவத்தை எளிமையாகக் கொண்டாட கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட 8 நாள்களிலும் வேதாகம சடங்குகள் ஆகமவிதிப்படி எளிமையாக நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் நிறைபறை எடுத்தல், மேடை நிகழ்ச்சிகள், யானைகளுடன் கூடிய பள்ளிவேட்டை, ஆறாட்டு திருவீதி உலா, சிறப்பு அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. மாா்ச் 31 வரை திருக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும். தினசரி அன்னதானமும் நடைபெறாது என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com