மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில் மையத்தடுப்பு அமைக்கும் பணி தொடக்கம்

மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் சாலையின் நடுவே மையத்தடுப்பு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் சாலையின் நடுவே மையத்தடுப்பு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ரூ. 14.95 கோடி மதிப்பில் நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் மேட்டுப்பாளையம் மீனாட்சி பேருந்து நிலையத்திலிருந்து காரமடை குட்டை வரை சாலை அமைக்கப்பட்டது.

ஆனால், சாலை நடுவே மையத்தடுப்பு இல்லாததால் காரமடை, ஆசிரியா் காலனி, காந்தி நகா், குட்டையூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில் 15க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. மேலும் சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் சூழல் அதிகரித்தது.

இந்நிலையில் விபத்துகளை குறைக்க, மீனாட்சி பேருந்து நிலையத்திலிருந்து காரமடை குட்டை வரை சாலையின் நடுவே மையத்தடுப்பு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து தற்போது காரமடை குட்டையிலிருந்து குட்டையூா் வரை சாலை நடுவே மையத்தடுப்பு அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com