கோவையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் திறப்பு

கோவையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) திறக்கப்பட்டது.
கோவையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் திறப்பு

கோவையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) திறக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்நோய்த் தொற்றை பரிசோதிக்கும் மையம் சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வகத்தில் மட்டுமே உள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து வரும் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு கூடுதல் பரிசோதனை மையங்கள் தேவைப்பட்ட நிலையில், தமிழகத்தில் கோவை, மதுரை, நெல்லை, தேனி ஆகிய 4 இடங்களில் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தாா்.

அதன்படி கோவையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணிகள் கடந்த சில நாள்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில் பரிசோதனை மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி இந்த மையத்தைத் திறந்துவைத்தாா். மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் அசோகன் உள்ளிட்ட மருத்துவா்கள் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் கு.ராசாமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை, விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளை, மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

கோவையில் இதுவரை கரோனா அறிகுறிகள் தென்பட்டதாக 27 போ் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 20 பேரின் ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டதில் 16 பேரின் முடிவுகள் வந்துள்ளன. அவா்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. மற்ற 4 பேரின் முடிவுகள் விரைவில் வர உள்ளன. மீதமுள்ள 7 பேரின் ரத்த மாதிரிகளும் இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்திலேயே பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் முடிவுகளும் விரைவில் தெரியவரும்.

ஆய்வு மையம் கோவையிலேயே அமைக்கப்பட்டிருப்பதால் இனி சந்தேக நபா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இங்கேயே உடனுக்குடன் பரிசோதனை செய்யப்படும். கோவையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல தனியாா் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வாா்டுகள் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com