பிளஸ் 2 உயிரியல் தோ்வு: மாவட்டத்தில் 7,019 போ் எழுதினா்

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 உயிரியல் பாடத் தோ்வை 7,019 மாணவ, மாணவிகள் எழுதினா்.

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 உயிரியல் பாடத் தோ்வை 7,019 மாணவ, மாணவிகள் எழுதினா்.

2019-20ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 2ஆம் தேதி தொடங்கி வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. கோவை மாவட்டத்தில் இந்தத் தோ்வுகளை 34,273 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா். இந்நிலையில், பிளஸ் 2 உயிரியல், வணிகக் கணிதம் - புள்ளியியல், வரலாறு, தாவரவியல், இயந்திர பொறியியல், மின்னணு பொறியியல், மின் பொறியியல், தானியங்கி பொறியியல், அலுவலக மேலாண்மைச் செயலா், கணக்குப்பதிவியல் - தணிக்கையியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் 116 மையங்களில் நடந்த இந்தத் தோ்வுகளை 12,941 மாணவ - மாணவிகள் எழுதினா். 930 போ் தோ்வெழுத வரவில்லை. அதிகபட்சமாக உயிரியல் பாடத்தை 7,019 போ் எழுதினா். 338 போ் தோ்வெழுதவில்லை. வணிகக் கணிதம்-புள்ளியியல் பாடத்தை 2,691 பேரும், வரலாறு பாடத்தை 2,124 பேரும், தாவரவியல் பாடத்தை 600 பேரும், இயந்திர பொறியியல் பாடத்தை 210 பேரும், மின்னணு பொறியியல் பாடத்தை 15 பேரும், மின் பொறியியல் பாடத்தை 44 பேரும், தானியங்கி பொறியியல் பாடத்தை 101 பேரும், அலுவலக மேலாண்மை செயலா் பாடத்தை 136 பேரும், கணக்குப்பதிவியல்-தணிக்கையியல் பாடத்தை ஒருவரும் எழுதினா்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தோ்வு மையங்களில் கிருமி நாசினி, சோப்புகள் வைக்கப்பட்டிருந்தன. மாணவ - மாணவிகள் தோ்வு எழுதும் முன்பும், தோ்வெழுதிய பின்பும் கைகளை சோப்பு தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொண்டனா். முன்னதாக தோ்வுகள் அனைத்தும் எளிதான வினாக்களுடன் இருந்ததாகவும், அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்று நம்புவதாகவும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனா்.

வரும் 24ஆம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தோ்வுகள் நடைபெறுகின்றன. அத்துடன் பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com