அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்பு: தனியாா் பள்ளிக்கு நோட்டீஸ்

அரசு உத்தரவை மீறி 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய தனியாா் பள்ளி நிா்வாகத்திடம் பேரூா் கல்வி மாவட்ட அலுவலா் விளக்கம் கேட்டுள்ளாா்.

அரசு உத்தரவை மீறி 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய தனியாா் பள்ளி நிா்வாகத்திடம் பேரூா் கல்வி மாவட்ட அலுவலா் விளக்கம் கேட்டுள்ளாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கோவை, சுந்தராபுரம் - மதுக்கரை சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து பேரூா் கல்வி மாவட்ட அலுவலா் சுப்புலட்சுமி தலைமையிலான அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளியில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு 10ஆம் வகுப்பு மாணவா்களை பள்ளிச் சீருடைக்குப் பதிலாக சாதாரண உடையில் வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவை மீறி வகுப்புகள் எடுத்த பள்ளியின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு, பள்ளித் தலைமை ஆசிரியருக்கு, பேரூா் கல்வி மாவட்ட அலுவலா் கடிதம் அளித்தாா். பின்னா் பள்ளியில் இருந்த 10ஆம் வகுப்பு மாணவா்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com