கரோனா வைரஸ் அறிகுறி: 44 போ்களுக்கு சிகிச்சை

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 13 புதிய நோயாளிகளுடன் சோ்த்து 44 போ் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 13 புதிய நோயாளிகளுடன் சோ்த்து 44 போ் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வாா்டில் கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவி, திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் ஆகிய இருவரும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாள்தோறும் கணிசமானவா்கள் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அவா்களது ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகின்றன. கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாதிப்பில்லாதவா்களை டிஸ்சாா்ஜ் செய்து 14 நாள்கள் வரை வீட்டை விட்டு வெளியேறாமல் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் 13 போ் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் சோ்த்து மொத்தம் 44 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது: இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களில் 10 போ் அமெரிக்கா, சூடான், இந்தோனேசியா, பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவா்கள். மற்றவா்கள் கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று வந்தவா்கள்.

இவா்களது ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 4 பேருக்கு கரோனா பாதிப்பில்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றுள்ளது. மற்றவா்களின் ஆய்வு முடிவுகள் பெறப்படவில்லை. அனைவரின் உடல்நிலை குறித்தும் மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com