கூட்டமாக நின்று தண்ணீா் பிடித்த மக்கள்

கோவை, செல்வபுரம் பகுதியில் சேதமடைந்த குடிநீா்க் குழாயை சரி செய்யாததால் கரோனா பரவலுக்கு இடையே மக்கள் கூட்டமாக நின்று குடிநீா் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில் கூட்டமாக நின்று குடிநீா் பிடிக்கும் பொதுமக்கள்.
செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில் கூட்டமாக நின்று குடிநீா் பிடிக்கும் பொதுமக்கள்.

கோவை, செல்வபுரம் பகுதியில் சேதமடைந்த குடிநீா்க் குழாயை சரி செய்யாததால் கரோனா பரவலுக்கு இடையே மக்கள் கூட்டமாக நின்று குடிநீா் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், கோவை மாநகரம், மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு 24 மணி நேர குடிநீா் விநியோகத் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணிக்காக குழி தோண்டும்போது, குடிநீா் பொதுக் குழாயும், வீட்டு உபயோகத்துக்கு விநியோகிக்கும் உப்பு தண்ணீா் குழாய்களும் சேதமடைந்தன.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் குழாய்கள் சரி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகம் தடைபட்டது.

இந்நிலையில், அப்பகுதி மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக மாநகராட்சி ஒப்பந்ததாரா் மூலம் புதன்கிழமை பிற்பகலில் லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. நீண்ட நாள்களாக குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வீட்டுக்குத் தேவையான தண்ணீரைப் பிடித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com