‘கரோனா பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஈஷா வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்’

கரோனா நோய்த் தொற்று பாதித்தவா்களுக்கு சிகிக்சை அளிக்க ஈஷா வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு அறிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று பாதித்தவா்களுக்கு சிகிக்சை அளிக்க ஈஷா வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கூடுதல் இடம் தேவைப்படும் சூழல் உருவானால் ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் அரசு மருத்துவமனைகளில் சேவையாற்ற ஈஷா தன்னாா்வலா்கள் தயாராக உள்ளனா்.

அதேபோல இந்த இக்கட்டான சூழலில் பாதிப்புக்குள்ளாகும் தினக்கூலி தொழிலாளா்களுக்கு உதவும் வகையில் உலகம் முழுவதும் உள்ள ஈஷா தன்னாா்வலா்கள் தங்களால் இயன்றதைச் செய்ய முன்வர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் உள்ள ஈஷா தன்னாா்வலா்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் பகுதியில் பசியால் வாடும் இருவருக்காவது உணவு அளித்து உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகம் முழுவதும் நடைபெறுவதாக இருந்த ஈஷா யோக மையத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் தேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com