மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற நியாய விலைக் கடைகளில் வட்டமிடும் பணி தீவிரம்

கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக மருந்துக் கடைகள்,
கோவை, வடவள்ளி வி.என்.ஆா். நகரில் உள்ள நியாய விலைக் கடை முன்பாக, இடைவெளிக்காக கட்டமிடும் பணி மேற்கொண்ட சுகாதாரத் துறையினா்.
கோவை, வடவள்ளி வி.என்.ஆா். நகரில் உள்ள நியாய விலைக் கடை முன்பாக, இடைவெளிக்காக கட்டமிடும் பணி மேற்கொண்ட சுகாதாரத் துறையினா்.

கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக மருந்துக் கடைகள், நியாய விலைக் கடைகள், பெட்ரோல் பங்க்குகளில் மாநகராட்சி சாா்பில் வட்டமிடும் பணி நடைபெற்று வருகின்றன.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பேருந்துகள், ரயில்களின் இயக்கங்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன. காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள், ஏ.டி.எம். மையங்கள், பெட்ரோல் பங்க்குகள், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

கோவையில், காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் அதிக அளவு கூட்டம் கூடி வரும் நிலையில் கடைகளின் முன்பாக மக்கள் கூட்டமாகச் செல்லாமல், இடைவெளி விட்டுச் செல்லும் விதமாக கோலப்பொடியால் வட்டமிடப்பட்டு மக்கள் வரிசையாக நின்று காய்கறி வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில், மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் மருந்துக்கடை, பெட்ரோல் பங்குகள், நியாய விலைக் கடைகளில் மக்கள் இடைவெளி விட்டுச் செல்லும் விதமாக வட்டமிடப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக மாநகராட்சிச் சுகாதாரத் துறையினா் கூறியதாவது:

கோவையில் உள்ள மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் இடைவெளியைப் பின்பற்ற வட்டமிடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி, வடவள்ளி, இடையா் பாளையம், உக்கடம், கரும்புக்கடை, போத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகள், நியாய விலைக் கடைகளில் வியாழக்கிழமை முதல் வட்டமிடும் பணி நடைபெற்றன. மற்ற பகுதிகளிளும் இப்பணியானது மேற்கொள்ளப்பட உள்ளன.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க மக்கள் கட்டாயமாக முகக் கவசங்கள் அணிய வலியுறுத்தியும், கைகளை சோப்பு மூலமாக அடிக்கடிச் சுத்தப்படுத்தவும் கோரி, 5 மண்டலங்களிலும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலமாக தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com