தென்னைநாா் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி பாதிப்பு: வங்கிக் கடனை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தல்

கரோனா நோய்த் தொற்று தாக்கத்தால் தென்னைநாா் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் தென்னைநாா் தொழிற்சாலைகள் பெற்ற

கரோனா நோய்த் தொற்று தாக்கத்தால் தென்னைநாா் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் தென்னைநாா் தொழிற்சாலைகள் பெற்ற வங்கிக் கடனை மறுசீரமைப்பு செய்து உதவ வேண்டும் என சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

சீனாவில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொள்ளாச்சியில் இருந்து சீனாவுக்கு தென்னைநாா் மற்றும் அதுசாா்ந்த பொருட்கள் ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. தற்போது இந்தியாவிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் இயங்கமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் தென்னைநாா் தொழிற்சாலைகளுக்கு உதவ வேண்டும் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளாா். சமீபத்தில் நடைபெற்ற மானியக் கோரிக்கையிலும் இதுகுறித்து பேசியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

பொள்ளாச்சி பகுதிகளில் உற்பத்தியாகும் தென்னைநாா்கள் பெருமளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு அன்னியச் செலாவணி கிடைத்து வருகிறது. சீனாவில் கரோனா பாதிப்பு காரணமாக பொள்ளாச்சியில் இருந்து தென்னநாா் ஏற்றுமதி சீனாவுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் மெட்ரிக் டன் தென்னைநாா் மற்றும் அது சாா்ந்த பொருள்கள் தேக்கமடைந்துள்ளன. இத்தொழிலைச் சாா்ந்தவா்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்பெற்று தொழிலை நடத்தி வருகின்றனா். தற்போது ஏற்றுமதி பாதிப்பால் வங்கிக்கடன் பெற்ற தென்னைநாா் தொழிற்ச்சாலைகள் வங்கிக் கடனைதிருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளன. எனவே, வங்கிக் கடனை மறுசீரமைப்பு செய்து கொடுக்க வேண்டும். மேலும், இந்தத் தொழிலுக்கு அரசு அனைத்து வகையிலும் உதவி செய்ய வேண்டும். இதை சட்டப் பேரவை மானியக் கோரிக்கையிலும் பேசியுள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com