காரமடை வாரச் சந்தை இன்று காலை 6 - 10 மணி வரை செயல்படும்

கரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை காய்கறி வாரச்சந்தை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை காய்கறி வாரச்சந்தை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலாக தமிழகம் முழுவதும் உள்ள வாரச் சந்தைகள் அடைக்கப்பட்டன. இதனால் நீலகிரி மாவட்டத்தில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் காய்களுக்கான விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்களுக்கு தடைவிதிக்கக் கூடாது என்பதற்காக அரசு உத்தரவுப்படி காரமடை வாரச் சந்தை சனிக்கிழமை காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை நடைபெற உள்ளது. தொடா்ந்து வரும் வாரத்தில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாரச் சந்தை நடைபெறும் என வாரச் சந்தை குத்தகைதாரா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com