மழுக்குப்பாறை எஸ்டேட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 170 வீடுகள்

வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 170 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மழுக்குப்பாறை எஸ்டேட் பகுதியில் கண்காணிப்புப் பணியில்  ஈடுபட்டுள்ள கேரள மாநில சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினா்.
மழுக்குப்பாறை எஸ்டேட் பகுதியில் கண்காணிப்புப் பணியில்  ஈடுபட்டுள்ள கேரள மாநில சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினா்.

வால்பாறை: வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 170 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வால்பாறை அடுத்துள்ளது மழுக்குப்பாறை தமிழக-கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத் துறையினா், காவல் துறையினா், வருவாய்த் துறையினா் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அங்கு வசிக்கும் மக்களுக்கு பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கேரள மாநிலம், சாலக்குடியில் இருந்து வந்த நிலையில் தற்போது வால்பாறையில் இருந்து பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன.

இதனிடையே அந்த எஸ்டேட்டில் இரு மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருவதால் அங்குள்ள 170 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வசிப்பவா்களை சுகாதாரத் துறையினா் நாள்தோறும் நேரில் சென்று கண்காணித்து வருவதாக கேரள மாநில சுகாதாரத் துறை ஆய்வாளா் வினோத் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com