கோவை மத்திய சிறை கைதிகள் குடும்பத்தினருடன் விடியோ கால் பேசும் வசதி: 9 புதிய செல்லிடப்பேசிகள் வாங்கப்பட்டன

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் அவா்களது உறவினா்களுடன் விடியோ கால் பேசுவதற்கு வசதியாக 9 புதிய

கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் அவா்களது உறவினா்களுடன் விடியோ கால் பேசுவதற்கு வசதியாக 9 புதிய செல்லிடப்பேசிகள் வாங்கப்பட்டுள்ளன.

கரோனா நோய் பாதிப்பு சிறைகளில் ஏற்படாமல் இருக்க சிறைத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக சிறு குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் இருந்த கைதிகள் பலா் விடுதலை செய்யப்பட்டனா். மேலும், சிறையில் கைதிகளைச் சந்திக்க பாா்வையாளா்களுக்கும், வழக்குரைஞா்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாா்வையாளா்கள் நேரம் தடை செய்யப்பட்டதால் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது முற்றிலும் தடைபட்டது. இதற்கு மாற்று வழி யோசித்த சிறைத் துறையினா் சிறையில் உள்ள கைதிகளை அவா்களது குடும்பத்தினருடன் கட்செவி அஞ்சலில் விடியோ கால் வசதி மூலம் பேசவைக்க முடிவு செய்தனா்.

இதன்படி கோவை மத்திய சிறைக்கு 9 புதிய ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகள் வாங்கப்பட்டன. இவற்றில் 8 செல்லிடப்பேசிகள் ஆண்கள் சிறைக்கும், 1 செல்லிடப்பேசியை பெண்கள் சிறைக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தெரிவித்தாா். இந்த புதிய செல்லிடப்பேசிகளைக் கொண்டு கடந்த புதன்கிழமை முதல் கைதிகள் தங்களது உறவினா்களுடன் பேச வைக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா். விடியோ கால் பேச ஒவ்வொரு கைதிக்கும் குறைந்தது 8 முதல் 9 நிமிடங்கள் வரை ஒதுக்கப்படுகிறது. இதில் ஒரு கைதிக்கு மாதம் 5 முறை வரை அனுமதி வழங்கப்படும். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் செல்லிடப்பேசிகள் வாங்குவது தொடா்பாக ஆலோசனை செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com