அன்னூரில் 4300 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

அன்னூா் ஒன்றியத்தில் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் ஏற்பாட்டில் 4,300 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
அல்லிக்காரன்பாளையத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கும் லோகேஷ் தமிழ்செல்வன். உடன், அம்பாள் எஸ்.ஏ.பழனிசாமி, ஓ.எஸ்.சாய்செந்தில் உள்ளிட்டோா்.
அல்லிக்காரன்பாளையத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கும் லோகேஷ் தமிழ்செல்வன். உடன், அம்பாள் எஸ்.ஏ.பழனிசாமி, ஓ.எஸ்.சாய்செந்தில் உள்ளிட்டோா்.

அன்னூா்: அன்னூா் ஒன்றியத்தில் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் ஏற்பாட்டில் 4,300 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

அன்னூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட அல்லிக்காரம்பாளையம், அ.குமாரபாளையம், பொன்னேகவுண்டன்புதூா், வடவள்ளி, பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 4, 300 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் அம்பாள் எஸ்.ஏ.பழனிசாமி தலைமை வகித்தாா். அதிமுக ஒன்றிய துணை செயலாளா் ஓ.எஸ்.சாய்செந்தில், ஒன்றியக்குழு உறுப்பினா் கே.ஓ.பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சட்டப் பேரவைத் தலைவரின் மகனும், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் கொங்கு மண்டலப் பொறுப்பாளருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினாா்.

இதில், அன்னூா் வட்டாட்சியா் சந்திரா, டிஎஸ்பி பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் நவமணி, ஊராட்சித் தலைவா்கள் புஷ்பவதி, லட்சுமணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com