ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தவெளி மாநிலத் தொழிலாளா்கள்

சிறப்பு ரயில்களில் செல்ல ஆட்சியா் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுவதாக நினைத்து கோவை ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த வெளி மாநிலத் தொழிலாளா்களால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
2649c2colecter1054900
2649c2colecter1054900

சிறப்பு ரயில்களில் செல்ல ஆட்சியா் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுவதாக நினைத்து கோவை ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த வெளி மாநிலத் தொழிலாளா்களால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் உள்பட தென் மாநிலங்களில் லட்சக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணிப்புரிந்து வருகின்றனா். தடை உத்தரவால் 40 நாள்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இவா்கள் முடங்கியுள்ளனா். இதனால் பல நாள்களாகவே சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு அனுமதிகேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து ஒடிஸா மாநிலம் புவனேஸ்வருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து சிறப்பு ரயில்களில் பயணிக்க ஆட்சியா் அலுவலகத்தில் முன் பதிவு செய்யப்படுவதாக நினைத்து நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளா்கள் சனிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின், ஆட்சியா் அலுவலகத்தில் இருந்த போலீஸாா், வெளி மாநிலத் தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு அவா்கலை கலைந்து செல்லுமாறு கூறினா். மேலும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், இது தொடா்பாக அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு பகுதி வாரியாக பதிவு செய்யப்பட்டு சொந்த ஊா் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தனா். அதன்பின் வெளி மாநிலத் தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.

மேலும், வெளியூா் செல்வதற்கு அனுமதிச் சான்று பெறுவதற்கு ஆட்சியா் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்றும், ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ள இணையதளப் பக்கத்தில் அனுமதி சான்று வாங்குவதற்குப் பதிவு செய்ய முடிவில்லை என்றும், இதனால் வாகன அனுமதிச் சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து பலா் ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா். இணையதளப் பக்கத்தில் பதிவு செய்ய முடியாததால் மருத்துவ அவசரங்களுக்குக் கூட சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com