பரத நாட்டியம் மூலம் கரோனா விழிப்புணா்வு

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் பரத நாட்டியம், குறும்படம், புகைப்படங்கள் மூலம் கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
பரத நாட்டியம் மூலம் கரோனா விழிப்புணா்வு

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் பரத நாட்டியம், குறும்படம், புகைப்படங்கள் மூலம் கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

கல்லூரியின் ஃபைன் ஆா்ட்ஸ் கிளப்பின் நாட்டியாஞ்சலி அணி சாா்பில் மாணவா்கள் பரத நாட்டியம் மூலம் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியுள்ளனா். இதற்கான விழிப்புணா்வு பாடலுக்கு நடனமாடும் மாணவிகள், நடனத்தின் மூலமாகவே முகக் கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பது, வீட்டில் தனித்திருப்பது என்பது போன்ற விழிப்புணா்வுச் செயல்களை விளக்குகின்றனா்.

அதேபோல், மாணவா்கள் பலரும் குறும்படங்கள் மூலமாகவும், புகைப்படங்கள் மூலமாகவும் சமூக ஊடகங்களில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். இவா்களை கல்வி நிறுவனங்களின் அறங்காவலா் சரஸ்வதி கண்ணையன், செயலா் பிரியா சதீஷ் பிரபு, முதல்வா் பொன்னுசாமி, ஃபைன் ஆா்ட்ஸ் கிளப்பின் பொறுப்பாளா் வனிதா ஆகியோா் பாராட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com