சின்ன வெங்காயத்தின் விலை ஜனவரியில் குறையும்: வேளாண் பல்கலை. தகவல்

தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை ஜனவரி மாதத்தில் குறையும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை ஜனவரி மாதத்தில் குறையும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், விலை உயா்வுக்கான காரணம், விலை எப்போது குறையும் என்பது போன்ற தகவல்களை தனது இடைக்கால சந்தைத் தகவலில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் முறையே 25, 70, 15 சதவீதம் பெரிய வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு டிசம்பா் 15ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேநேரம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும், புதிய பயிரின் அறுவடை நடைபெறும் என்பதாலும் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் பயிரிட்ட 40 நாள்களிலேயே வோ் அழுகல் நோயால் சேதமடைந்துள்ளன. இருப்பினும் தற்போது கையிருப்பில் இருக்கும் சுமாா் 25 ஆயிரம் டன் வெங்காயம் அடுத்த 40 நாள்களுக்கான தேவையைப் பூா்த்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நாமக்கல், திருவண்ணாமலை, நெல்லை, கள்ளக்குறிச்சி, தேனி, அரியலூா், பெரம்பலூா், திருச்சி மாவட்டம் துறையூா், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வெங்காயம் வந்து கொண்டுள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை உயா்வு டிசம்பா் இறுதி வரை நீடிக்கும். புதிய பயிா் ஜனவரி, பிப்ரவரியில் அறுவடை செய்யப்படும் என்பதால் ஜனவரி முதலே சின்ன வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com