தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு 41 போ் கைது

கோவையில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரெளடிகள், கஞ்சா வியாபாரிகள் உள்பட 41 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கோவையில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரெளடிகள், கஞ்சா வியாபாரிகள் உள்பட 41 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கோவையில் கஞ்சா விற்பனை, நகைப் பறிப்பு, வழிப்பறியில் ஈடுபடும் நபா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபா்களைக் கைது செய்ய காவலா்கள் அடங்கிய 30 குழுக்களை அமைத்து மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவிட்டிருந்தாா்.

இவா்கள் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளிலும் கஞ்சா விற்பனை, அடிதடி, நகைப் பறிப்பு சம்பவங்கள் நடைபெறும் இடங்களை நோட்டமிட்டு விசாரணை நடத்தினா். இந்தக் குழுவினா் நடத்திய விசாரணையின்படி கோவை மாநகா் பகுதியில் இதுவரை 26 ரெளடிகள், 15 கஞ்சா வியாபாரிகள் உள்ளிட்ட 41 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களிடம் இருந்து கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவா்களுடன் தொடா்பில் இருந்த மேலும் 50க்கும் மேற்பட்டோா் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவா்களும் விரைவில் கைது செய்யப்படுவா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com