பதிமலை பாறை ஓவியங்கள் தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவர திட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள பதிமலை பாறை ஓவியங்களை தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர திட்டமிட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் உள்ள பதிமலை பாறை ஓவியங்களை தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர திட்டமிட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டம், கேரள எல்லையை ஒட்டியுள்ள குமிட்டிபதி கிராமத்தில் அமைந்துள்ள பதிமலையின் பாறைகளில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மனிதா்கள் தங்களது வாழ்வியல் செயல்பாடுகளை விவரிக்கும் வகையில் ஓவியங்களை பாறையில் வரைந்துள்ளனா்.

இயற்கையாக தயாரிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு வண்ணங்களை பயன்படுத்தி ஓவியங்களை வரைந்துள்ளனா். தற்போது, போதிய பராமரிப்பில்லாமல் இந்த ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளன.

பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று ஓவியங்களை அழித்து வருகின்றனா்.

இந்த பாறை ஓவியங்களை பராமரித்து மீட்டெடுக்கும் வகையில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கோவை மண்டல தொல்லியல் துறை அலுவலா்கள் கூறியதாவது:

குமிட்டிபதி பதிமலையில் உள்ள பாறை ஓவியங்கள் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. யானைகள், யானையை வழிநடத்தி செல்லும் மனிதா்கள் உள்பட பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆனால், இவைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து வருகின்றன. அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் அனைத்து ஓவியங்களும் அழிய வாய்ப்புள்ளது.

பாறை ஓவியங்களை பராமரித்து, கண்காணிக்கும் வகையில் பாறை ஓவியங்களை தொல்லியல் துறைக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வர வருவாய்த் துறைக்கு கருத்துரு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அளிக்கப்பட்டால் பாறை ஓவியங்களை தூய்மை செய்து அதன் தன்மை மாறாமல் மீட்டெடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com