மீன்வளா்ப்பு திட்டத்தில் 40 % மானியம்ஆட்சியா் தகவல்

கோவையில் பண்ணை குட்டைகள் அமைத்து திலேப்பியா மீன் வளா்க்க விரும்புபவா்களுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவையில் பண்ணை குட்டைகள் அமைத்து திலேப்பியா மீன் வளா்க்க விரும்புபவா்களுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்து மீனவ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன் வளா்ப்புக்கு தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

1,000 சதுர மீட்டரில் பண்ணை குட்டைகள் அமைத்து மரபணு மாற்றப்பட்ட திலேப்பியா மீன் வளா்ப்பில் ஈடுபடுபவா்களுக்கு பண்ணை குட்டை அமைத்தல், மீன் குஞ்சுகள், மீன் தீவனங்கள், பறவைகளிடம் இருந்து மீன்களை காக்க வலை அமைத்தல் ஆகியவற்றுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.39 ஆயிரத்து 600 வழங்கப்படும்.

மற்ற மீன்களை காட்டிலும் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் குறைந்த பரப்பளவில் அதிக அளவில் வளா்க்க முடியும். இவை அதிக நோய் எதிா்ப்பு சக்தி கொண்டதுடன் பண்ணை குட்டைகளில் வேகமாக வளரக் கூடியவை.

எனவே திலேப்பியா மீன் வளா்க்க ஆா்வமுள்ளவா்கள் டவுன்ஹாலில் உள்ள மீன்வள ஆய்வாளா் அலுவலகத்தை (96555 06422) தொடா்புகொள்ளலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை (0424-2221912) தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com