கொடிசியா மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம்

கோவையில் தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காக கொடிசியா மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காக கொடிசியா மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊா்களுக்கும், உறவினா் இல்லங்களுக்கும் செல்ல வசதியாக காந்திபுரம், சிங்காநல்லூா், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஈரோடு, திருப்பூா், சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்ல காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமேசுவரம், திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்ல சிங்காநல்லூரில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காகவும், நெரிசலைத் தவிா்க்கவும் கோவை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் கொடிசியா வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை செயல்படும் இந்த பேருந்து நிலையத்தில் சேலத்துக்கும், சேலத்தைக் கடந்து செல்லும் பேருந்துகளும், திருச்சிக்கும், திருச்சியைக் கடந்து செல்லும் பேருந்துகளும் சேலம், திருச்சி மாா்க்கத்தில் இயக்கப்பட உள்ள 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும் பயணிகளின் வசதிக்காக கொடிசியா தற்காலிக பேருந்து நிலையத்தில் கழிப்பறை, குடிநீா், நிழற்குடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com