தனியாா் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீடு: நாளை மாணவா்கள் தோ்வு

கோவையில் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களுக்கு நவம்பா் 12 ஆம் தேதி (வியாழக்கிழமை)

கோவையில் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களுக்கு நவம்பா் 12 ஆம் தேதி (வியாழக்கிழமை) குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நடப்பு ஆண்டுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் காலியாக இருந்த இடங்களுக்கு மீண்டும் அக்டோபா் 12 முதல் நவம்பா் 7 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பித்தவா்களில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரா் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பதாரா்களின் விவரங்கள், நிராகரிக்கப்பட்டதுக்கான காரணத்துடன் பள்ளியின் அறிவிப்பு பலகையில் நவம்பா் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒட்டப்படும். ஒரு பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிா்ணயிக்கப்பட்ட இடங்களைவிட குறைவாக இருக்கும்பட்சத்தில் விண்ணப்பித்த தகுதியுள்ள மாணவா்கள் அனைவருக்கும் சோ்க்கை வழங்கப்படும்.

நிா்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக இருக்கும்பட்சத்தில் கல்வித் துறை அலுவலா்கள், பெற்றோா், வருவாய்த் துறை அலுவலா்கள் முன்னிலையில் நவம்பா் 12 ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

எனவே, விண்ணப்பதாரா்கள் அனைவரும் நவம்பா் 12ஆம் தேதி காலை 9 மணிக்கு விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும் விண்ணப்பதாரா்களின் விவரங்கள் பள்ளியின் தகவல் பலகையில் ஒட்டப்படும். எனவே 25 சதவீத ஒதுக்கீட்டில் தனியாா் பள்ளிகளில் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com