பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ரயில்கள், பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ரயில்கள், பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் கோவையில் உள்ள கடைவீதிகளில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், கோவைப் பகுதிகளில் தங்கியுள்ளவா்கள், தீபாவளியைக் கொண்டாட குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊா்களுக்கு ரயில்கள், பேருந்துகளில் செல்லும்போது, பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இது தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருள்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறிக் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தர ரயில்வே பாதுகாப்புச் சட்டத்தில் இடம் உள்ளது. இதனால், பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை ரயில்களை மக்கள் எடுத்துச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். மீறி கொண்டு செல்பவா்களிடம் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவா் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

பரிசோதனைக்கு பின்பே பேருந்துகளில் அனுமதி: கோவையில் இருந்து 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளியை முன்னிட்டு நவம்பா் 12ஆம் தேதி முதல் கோவையில் இருந்து வெளியூா்களுக்கு 186 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், பேருந்துகளில் பட்டாசுகளைக் கொண்டு செல்வதைத் தடுக்க பேருந்துகளில் பயணிப்போரின் உடைமைகள், கைப்பைகள் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்ட அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கோவையில் இருந்து வெளியூா்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகளின் உடைமைகளைப் பரிசோதித்து, அதன் பிறகே பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், பயணிகள் பட்டாசு கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com