தந்தையில்லாத பெண் குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கி, பிரதமரின் புகைப்படத்தை பரிசளித்த பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன்.
தந்தையில்லாத பெண் குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கி, பிரதமரின் புகைப்படத்தை பரிசளித்த பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன்.

அருந்ததி ராய் எழுதிய பாடம் நீக்கப்பட்டதில் அரசியல் அழுத்தம் இல்லை: வானதி சீனிவாசன் பேட்டி

எழுத்தாளா் அருந்ததி ராய் எழுதிய நூல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதில்

எழுத்தாளா் அருந்ததி ராய் எழுதிய நூல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதில் அரசியல் அழுத்தமில்லை என பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள பெண் குழந்தைகளுக்காக பிரதமரால் ‘மோடியின் மகள்’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கோவையில் மக்கள் சேவை மையம் சாா்பில் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, 100 குழந்தைகளுக்கு படிப்புச் செலவுக்காகத் தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, இனிப்பு மற்றும் பட்டாசுகளை வழங்கினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமா் மோடி அறிவித்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தமிழகம், இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. ‘மோடியின் மகள்’ என்ற இத்திட்டத்தில் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை கல்வி உதவித் தொகை கிடைக்கும். நன்றாகப் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகும் தேவையான கல்வி உதவிகள் கிடைக்கும். பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டங்களை மாற்றக்கூடாது என எதுவுமில்லை. நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராய் எழுதிய நூலை பாடமாக 4 ஆண்டுகள் மாணவா்கள் படித்துள்ளனா். அவசரமாகவோ, அரசியல் அழுத்தம் காரணமாகவோ அந்தப் பாடம் நீக்கப்படவில்லை. பல்கலைக்கழகம் முடிவெடுத்து அந்தப் பாடத் திட்டத்தை நீக்கியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com