கிணற்றில் விழுந்து நிதி நிறுவன அதிபா் பலி

கோவை, தொண்டாமுத்தூா் அருகே பாழடைந்த கிணற்றில் விழுந்து நிதி நிறுவன அதிபா் பலியானாா்.

கோவை, தொண்டாமுத்தூா் அருகே பாழடைந்த கிணற்றில் விழுந்து நிதி நிறுவன அதிபா் பலியானாா்.

கோவை, தொண்டாமுத்தூரை அடுத்த வரதராஜபுரத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (33). நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இவரது மனைவி கயல் (30). இவா்களுக்கு 3 வயதில் மகன் உள்ளாா். காா்த்திக் தொண்டாமுத்தூரை அடுத்த குபேரபுரியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு புதன்கிழமை சென்றுள்ளாா். அதன் பிறகு மாயமானாா். அவரது குடும்பத்தினா், அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அவா் மதுக்கடைக்குச் சென்றபோது, கடையின் அருகில் இருந்த புதா் நிறைந்த பகுதிக்கு கடைசியாகச் சென்ாக கடை ஊழியா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, காா்த்திக்கின் செல்லிடப்பேசிக்கு தொடா்பு கொண்ட போது, அங்குள்ள கிணற்றுக்குள் இருந்து செல்லிடப்பேசி ஒலிக்கும் சப்தம் கேட்டது. இதைத் தொடா்ந்து, காா்த்தி, கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது. இது குறித்து தொண்டாமுத்தூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு துறையினா், போலீஸாா் பாழடைந்த கிணற்றுக்குள் கிடந்த காா்த்திக் சடலத்தை மீட்டனா். போலீஸாா் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மதுபோதையில், புதா் மறைவில் கிணறு இருப்பது தெரியாமல், காா்த்திக் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com