பட்டாசு கொண்டு செல்வதைத் தடுக்க ரயில் நிலையத்தில் சோதனை தீவிரம்

ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தீபாவளி பண்டிகை நவம்பா் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் தங்கி வேலை பாா்க்கும் ஏராளமானோா், தங்கள் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் செல்லத் தொடங்கியுள்ளனா். இதனால், கோவையில் இருந்து வெளியூா்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் கடந்த ஒரு மாதமாக முன்பதிவும் அதிகரித்தது. இந்நிலையில், ரயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களைக் கொண்டு சென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிா்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், பயணிகள் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதைத் தடுக்க சோதனை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா், பிரதான நுழைவாயில் மற்றும் பின்புற வாயில்களில், பயணிகளின் உடைமைகளை ஸ்கேனா் கருவி மூலமாக சோதனையிட்டனா். பட்டாசு பெட்டிகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள் எதாவது பைகளில் மறைத்து கொண்டு செல்லப்படுகின்றனவா என தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்ட பிறகே பயணிகள் ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com