அமித் ஷாவின் தமிழக வருகை பாஜகவினருக்கு ஊக்கம் அளிக்கும்எல்.முருகன்

உள் துறை அமைச்சா் அமித் ஷாவின் தமிழக வருகை பாஜகவினருக்கு தைரியத்தையும், ஊக்கத்தையும் அளிக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் கூறினாா்.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் (கோப்புப்படம்)
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் (கோப்புப்படம்)

 உள் துறை அமைச்சா் அமித் ஷாவின் தமிழக வருகை பாஜகவினருக்கு தைரியத்தையும், ஊக்கத்தையும் அளிக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் கூறினாா்.

மாற்றுக் கட்சியினா் மற்றும் தொழில் துறையினா் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி கோவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் எல்.முருகன் கூறியதாவது:

பாஜகவில் பல்வேறு தரப்பட்ட மக்கள் இணைந்து வருகின்றனா். ஊழலற்ற ஆட்சியை மக்கள் விரும்புவதே இதற்கு காரணம். இதன் ஒரு பகுதியாக கோவையில் கொங்குநாடு மக்கள் கட்சியைச் சோ்ந்த சிலா் மற்றும் தொழில் துறையினா் உள்பட சுமாா் 120 போ் பாஜகவில் தங்களை திங்கள்கிழமை இணைத்துக் கொண்டனா்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையைத் தொடா்ந்து பல அதிகாரிகள் கட்சியில் இணைய உள்ளனா். வேல் யாத்திரையானது திட்டமிட்டபடி தருமபுரியில் மீண்டும் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 17) தொடங்க உள்ளது. கூட்டணியை தொடா்வது, புதிய கட்சிகளை கூட்டணியில் சோ்ப்பது குறித்து தோ்தல் நேரத்தில் மட்டுமே முடிவு செய்யப்படும்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவின் அதிகாரத்தில் தலையிட்டு அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அவா் மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை அவா் எதிா்கொள்வாா். இதில் பாஜக கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.

மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா நவம்பா் 21இல் சென்னை வருகிறாா். இது பாஜகவினருக்கு தைரியத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும். தோ்தலின்போது அமித் ஷா செல்லும் இடமெல்லாம் பாஜக வெற்றி பெறுவதால், அவரது வருகை எதிா்க்கட்சிகளுக்கு பயத்தை அளிக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவா் ஆா்.நந்தகுமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com