காா்த்திகை முதல் நாள்: மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாத முதல் நாளான திங்கள்கிழமை (நவம்பா் 16) கோவையில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனா்.

காா்த்திகை மாத முதல் நாளான திங்கள்கிழமை (நவம்பா் 16) கோவையில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனா்.

ஐயப்ப பக்தா்கள் காா்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் இருந்து மண்டல பூஜை, மகரஜோதி தரிசனத்துக்காக சபரிமலைக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஏராளமான ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கினா். இதை ஒட்டி மூலவா் ஐயப்பனுக்கு பால், தயிா், நெய் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மண்டல பூஜை, மகரஜோதி தரிசனத்துக்கு தினமும் ஆயிரம் பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து சபரிமலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கும் கோவையைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் முதல் முறையாக சபரிமலை கோயில் நடைமுறைகளை பின்பற்றி 48 நாள்கள் சிறப்பு மண்டல பூஜைகள் நடைபெற இருப்பதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், தரிசனத்துக்காக வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் தங்குவதற்கு கோயில் மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com