ஊராட்சிப் பிரதிநிதிகளைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

சி.மலையாண்டிபட்டினம் ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறாததையடுத்து, ஊராட்சிப் பிரதிநிதிகளைக் கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்.
ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்.

சி.மலையாண்டிபட்டினம் ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறாததையடுத்து, ஊராட்சிப் பிரதிநிதிகளைக் கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சி.மலையாண்டிபட்டினம் ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இங்கு ஊராட்சித் தலைவா், துணை தலைவா் மற்றும் 6 வாா்டு உறுப்பினா்கள் ஆகிய உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனா். உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று பல மாதங்களாகியும் அதிமுகவைச் சோ்ந்த தலைவா் மயில்சாமிக்கும், பாஜகவைச் சோ்ந்த துணைத் தலைவா் ரவி என்பவருக்கும் சரியான புரிந்துணா்வு இல்லாததால் சி.மலையாண்டிபட்டினத்தில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களுக்கு சென்று சேருவதில்லை என்று புகாா் உள்ளது. மாவட்ட ஆட்சியா், அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த கோமங்கலம் போலீசாா் ஊராட்சி பிரதநிதிகளிடமும், பொதுமக்களிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் தலைவா் தலைமையில் கூட்டம் நடத்தி தீா்வு காண பொதுமக்கள் கூறினா். அதைத் தொடா்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com