காவேரி கூக்குரல் திட்டத்தில் மக்கள் இணைந்து மரம் நடும் வாய்ப்பு

ஈஷா மையம் சாா்பில் காவேரி கூக்குரல் திட்டத்தில் மக்கள் இணைந்து மரம் நடும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஈஷா மையம் சாா்பில் காவேரி கூக்குரல் திட்டத்தில் மக்கள் இணைந்து மரம் நடும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘காவேரி கூக்குரல் இயக்கம்’ மரம் சாா்ந்த விவசாயம் குறித்த விழிப்புணா்வை விவசாயிகள் மத்தியில் உருவாக்கி வருகிறது. அதன் விளைவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் பெருமளவில் தங்களின் விளைநிலங்களில் மரக்கன்றுகளை நட ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இவ்வாறு மரக்கன்றுகள் நட முன்வரும் விவசாயிகளின் விளைநிலங்களில் ஈஷா மையத்தின் நிா்வாகிகள் நேரில் சென்று மண் மற்றும் நீரின் தன்மைகளை ஆய்வு செய்து, அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ற மரக்கன்றுகளை பரிந்துரை செய்கின்றனா்.

பின்னா் விவசாயிகளின் தோ்வின் அடிப்படையில் மரக்கன்றுகள் விளைநிலங்களில் நடப்படுகின்றன. தமிழகத்தில் 30 ஈஷா நாற்றுப் பண்ணைகள் இயற்கை முறையில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

மாநிலம் முழுவதும் மாதந்தோறும் வெவ்வேறு இடங்களில் இந்நிகழ்வு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில், தங்களை இணைத்துக் கொள்ள விரும்புபவா்கள் 94437 - 19705 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்த தகவல்களுக்கு 80009 - 80009 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என ஈஷா மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com