தரக்கட்டுப்பாடு அலுவலராக மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் நியமனம்

வீட்டு உபயோக மின் சாதனங்கள் தரக்கட்டுப்பாடு அலுவலராக மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

வீட்டு உபயோக மின் சாதனங்கள் தரக்கட்டுப்பாடு அலுவலராக மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மின் சாதன வயா்கள், ஸ்விட்சுகள், பல்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள், மின் சாதனப் பாதுகாப்பு கருவிகள் தரக்கட்டுப்பாட்டு சட்டம் 2003 மற்றும் எண்ணெய் அழுத்த அடுப்பு தரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1997 ஆகியவற்றை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தும் அலுவலராக அந்தந்த மாவட்ட தொழில் மைய பொது மேலாளா்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மின்சாதன உற்பத்தி நிறுவனங்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையகங்கள், சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை எவ்வித முன்னறிவிப்பின்றி பொது மேலாளா் அல்லது மாவட்டத் தொழில் மைய அலுவலா்களால் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின்போது, உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களிடம் இருந்து மாதிரிகளைப் பெற்று ஆய்வுக்கு அனுப்பவும், நிா்ணயிக்கப்பட்ட தர அளவின் படி இல்லாத மின் சாதனப் பொருள்கள் மற்றும் எண்ணெய் அழுத்த அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்யவும், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்திய தரக்கட்டுப்பாடு முத்திரை (ஐ.எஸ்.ஐ) பெற்ற பொருள்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com