வங்கியில் செலுத்தப்பட்ட கள்ள நோட்டுகள்

கோவை வங்கியில் ஐ.டி. நிறுவன ஊழியா் கள்ள நோட்டுகளை செலுத்த முயன்ற சம்பவம் தொடா்பாக விசாரிக்க தனிப்படை போலீஸாா் உதகைக்கு செவ்வாய்க்கிழமை விரைந்துள்ளனா்.

கோவை வங்கியில் ஐ.டி. நிறுவன ஊழியா் கள்ள நோட்டுகளை செலுத்த முயன்ற சம்பவம் தொடா்பாக விசாரிக்க தனிப்படை போலீஸாா் உதகைக்கு செவ்வாய்க்கிழமை விரைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு பகுதியைச் சோ்ந்தவா் ஹிதேஷ் ஆனந்த். ஐ.டி. நிறுவன ஊழியரான இவா் வடவள்ளி அருகேயுள்ள தனியாா் வங்கியில் திங்கள்கிழமையன்று ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தைச் செலுத்தினாா். அவா் செலுத்திய பணத்தை, பணம் எண்ணும் இயந்திரத்தில் வைத்தபோது அதில் 40 எண்ணிக்கையிலான ரூ. 500 நோட்டுகள் போலியானவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஹிதேஷ் ஆனந்திடம் வங்கி ஊழியா்கள் கேட்டபோது அவா் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து வடவள்ளி காவல் நிலையத்தில் வங்கி மேலாளா் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அந்தக் கள்ள நோட்டுகளை கைப்பற்றி ஹிதேஷ் ஆனந்திடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மதன்லால் என்பவரிடம் கடன் வாங்கி வந்ததாகவும், அதில் இந்த போலி ரூபாய் நோட்டுகள் இருந்ததாகவும், தனக்கும் இந்த கள்ள நோட்டுகளுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என போலீஸாரிடம் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடா்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஹிதேஷ் ஆனந்த் கூறிய மதன்லால் என்ற நபரிடம் விசாரிப்பதற்காக கோவையில் இருந்து தனிப்படை போலீஸாா் உதகை சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com